தமிழ் பிரமாதம் யின் அர்த்தம்
பிரமாதம்
பெயர்ச்சொல்
- 1
(பாராட்டி அல்லது உயர்வாகச் சொல்லும் விதத்தில்) மிகவும் சிறப்பு; அருமை.
‘‘என் மகன் பிரமாதமாக வீணை வாசிப்பான்’ என்று நண்பர் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்’‘கல்யாணத்தைப் பிரமாதமாக நடத்திவிட்டீர்கள்!’‘பிரமாதமான சாப்பாடு!’ - 2
(பெரும்பாலும் எதிர்மறைத் தொனியில்) குறிப்பிடும்படியானது அல்லது அதிகம் என்று சொல்லத் தக்கது.
‘வயதான காலத்தில் அவருக்கு என்ன பிரமாதமான செலவு இருக்கப்போகிறது?’‘நிலைமையில் பிரமாதமான மாறுதல் எதுவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை’ - 3
(எதிர்மறை வாக்கியங்களில்) ‘பெரிய விஷயம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.
‘நூறு ரூபாய்தானே வேண்டும். இது என்ன பிரமாதம், நானே தருகிறேன்’‘நீங்கள் இரண்டு பேரும் மனது வைத்தால் இந்த வேலையைச் செய்து முடிப்பது ஒன்றும் பிரமாதம் இல்லை’