தமிழ் பிரமி யின் அர்த்தம்

பிரமி

வினைச்சொல்பிரமிக்க, பிரமித்து

 • 1

  வியப்படைதல்; வியத்தல்.

  ‘பிரபலக் கலைஞர்களே பிரமிக்கும் அளவுக்கு அந்தப் பையன் பாடினான்’
  ‘பிரமிக்க வைக்கும் வானுயரக் கட்டடங்கள்’
  ‘அவளுடைய அழகு என்னைப் பிரமிக்கவைத்தது’
  ‘வேளாண்மையில் பிரமிக்கத் தக்க முன்னேற்றத்தை இந்தியா அடைந்துள்ளது’

 • 2

  என்ன செய்வது அல்லது என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் திகைத்துப்போதல்; மலைத்தல்.

  ‘ஒரே வாரத்தில் இவ்வளவு வேலைகளையும் எப்படிச் செய்து முடிப்பது என்று பிரமித்துப்போனான்’