தமிழ் பிரமுகர் யின் அர்த்தம்

பிரமுகர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு துறையிலோ அல்லது ஊரிலோ) பலருக்கும் தெரிந்திருக்கும் முக்கியமான நபர்; முக்கியஸ்தர்; பிரபலம்.

    ‘சட்டத் திருத்தம் குறித்துப் பல துறைப் பிரமுகர்களையும் பிரதமர் சந்தித்துப் பேசினார்’
    ‘விழாவில் திரைப்படப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்’
    ‘உள்ளூர்ப் பிரமுகர் ஒருவரைத் தேர்தலில் நிறுத்தக் கட்சி முடிவுசெய்தது’