தமிழ் பிரம்மாண்டம் யின் அர்த்தம்

பிரம்மாண்டம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (அளவு குறித்து வரும்போது) (பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில்) மிகப் பெரியது அல்லது விரிவானது.

  ‘மாநாட்டுக்குப் பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டது’
  ‘ஊர்வலத்தைப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்தனர்’
  ‘அவருடைய திட்டங்களெல்லாம் பிரம்மாண்டமானவை’

 • 2

  (திரைப்படம் போன்றவற்றைக் குறித்து வரும்போது) அதிகமான செலவில் எடுக்கப்படுவது.

  ‘‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தை வாசன் பிரம்மாண்டமாகத் தயாரித்தார்’
  ‘இப்போது தொலைக்காட்சித் தொடர்களைக்கூட பிரம்மாண்டமாகத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்’