தமிழ் பிரயாசை யின் அர்த்தம்

பிரயாசை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு முயற்சி; (முயற்சிக்கு வேண்டிய) உழைப்பு.

  ‘பிரயாசைக்குத் தகுந்த பலன் இல்லாமலா போகும்?’
  ‘தங்கையை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டான்’

 • 2

  அருகிவரும் வழக்கு சிரமம்; கஷ்டம்; பிரயத்தனம்.

  ‘கடைவீதிக் கூட்டத்திற்கு இடையே மிகுந்த பிரயாசையுடன்தான் நடந்துசெல்ல வேண்டியிருந்தது’
  ‘தொண்டையில் சிக்கியிருந்த சளியை மிகவும் பிரயாசைப்பட்டுக் காறித் துப்பினான்’