தமிழ் பிரவேசம் யின் அர்த்தம்

பிரவேசம்

பெயர்ச்சொல்

 • 1

  (கட்டடம் போன்றவற்றுள் அல்லது ஒரு துறையில்) நுழையும் செயல்; நுழைவு.

  ‘நடிகரின் அரசியல் பிரவேசம் எதிர்பார்த்த அளவுக்குப் பரபரப்பை ஏற்படுத்தவில்லை’
  ‘மிக இளம் வயதிலேயே பாரதியின் இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்தது’

 • 2

  (கூத்து, நாடகம் போன்றவற்றில் ஒரு பாத்திரம்) முதன் முதலாக மேடையில் தோன்றும் நிகழ்வு.

  ‘பீமனின் பிரவேசத்துக்குப் பிறகு பார்வையாளர்களின் சுவாரசியம் அதிகமாயிற்று’

 • 3

  வட்டார வழக்கு (தெய்வம்) ஒருவர்மூலமாக வெளிப்படுதல்.

  ‘இவள்மீது மாரியம்மன் பிரவேசித்திருக்கிறாள்’

 • 4

  சோதிடம்
  (கிரகப் பெயர்ச்சியின்போது ஒரு கிரகம்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லுதல்.

  ‘தை மாதம் ஒன்றாம் தேதி சூரியன் மகர ராசியில் பிரவேசம்’