தமிழ் பிரவேசி யின் அர்த்தம்

பிரவேசி

வினைச்சொல்பிரவேசிக்க, பிரவேசித்து

 • 1

  (உள்ளே) வருதல்; நுழைதல்.

  ‘அந்த நடிகர் அரங்கிற்குள் பிரவேசித்தபோது கைதட்டல் வானைப் பிளந்தது’
  ‘அறிவாளிகள் ஒதுங்கி நிற்காமல் அரசியலில் பிரவேசிக்க வேண்டும்’

 • 2

  (கூத்து, நாடகம் போன்றவற்றில் ஒரு பாத்திரம்) முதன்முதலாக மேடையில் தோன்றுதல்.

  ‘ராவணன் பிரவேசித்ததும் கூத்து சூடுபிடிக்கிறது’

 • 3

  சோதிடம்
  (கிரகப் பெயர்ச்சியின்போது ஒரு கிரகம்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்லுதல்.

  ‘பரணி 4ஆம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலமே அக்கினி நட்சத்திரம் ஆகும்’