தமிழ் பிராட்டி யின் அர்த்தம்

பிராட்டி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு தேவி.

  ‘சீதாப் பிராட்டியார்’
  ‘பெருமான் பிராட்டியுடன் ஆழ்வாருக்குக் காட்சியளித்தான்’

 • 2

  உயர் வழக்கு மரியாதைக்கு உரிய பெண்மணியின் பெயருக்குப் பின்னால் இணைக்கப்படும் சொல்.

  ‘நண்பர் தன் மகளுக்குச் சோழ இளவரசி குந்தவைப் பிராட்டியின் பெயரைச் சூட்டினார்’

 • 3

  உயர் வழக்கு மூதாட்டி.

  ‘ஔவைப் பிராட்டி’