தமிழ் பிரார்த்தனை யின் அர்த்தம்

பிரார்த்தனை

பெயர்ச்சொல்

 • 1

  (கடவுள், மகான் போன்றவர்களை) வழிபடுதல்; வழிபாடு.

  ‘வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று பிள்ளையாரிடம் பிரார்த்தனை செய்துகொண்டான்’
  ‘பிரார்த்தனை முடிந்ததும் மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்’
  ‘இன்று பிரார்த்தனைக் கூட்டம் மாலை ஆறு மணிக்கு நடைபெறும்’
  ‘நோயுற்ற பிரதமர் குணம் அடைய வேண்டும் என்று பல மாநிலங்களிலும் சர்வ மதப் பிரார்த்தனை நடந்தது’