தமிழ் பிரியம் யின் அர்த்தம்

பிரியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அன்பு.

  ‘அவருக்குத் தன் கடைசிப் பையன் மேல் ஒரு தனிப் பிரியம்’
  ‘பிரிய நண்பனைப் பிரிந்த துக்கத்தில் சோர்ந்திருந்தான்’
  ‘வீட்டுக்கு வருபவர்களிடம் அவர் பிரியமாகப் பேசுவார்’
  ‘பிரியமான மாமியார்’

 • 2

  விருப்பம்.

  ‘அவருக்கு அல்வா என்றால் கொள்ளைப் பிரியம்’
  ‘உனக்குப் பிரியமான பாட்டைப் பாடட்டுமா?’