தமிழ் பிரிவு யின் அர்த்தம்

பிரிவு

பெயர்ச்சொல்

 • 1

  (பிரிக்கப்பட்டது தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஓர் அடிப்படையில்) வகைப்படுத்தப்பட்டது; வகைப்பாடு

   ‘இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகள்’
   ‘மகளிர் பிரிவுக்கான போட்டிகள்’
   ‘ஆசிரியர் மாணவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்துக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றார்’

  2. 1.2 ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றில் வெவ்வேறான செயல்பாடுகளைக் கொண்டவற்றுள் ஒன்று

   ‘அங்காடியில் சுய சேவைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது’
   ‘அவர் மருந்துத் தொழிற்சாலையின் ஆராய்ச்சிப் பிரிவில் பணிசெய்கிறார்’

 • 2

  (ஒருவரிடமிருந்து அல்லது ஒன்றிடமிருந்து பிரிவது தொடர்பான வழக்கு)

  1. 2.1 (ஒன்றை விட்டு அல்லது ஒருவரை விட்டு) பிரியும் அல்லது பிரிந்திருக்கும் நிலை

   ‘மனைவியின் பிரிவு அவனை வருத்தியது’

  2. 2.2 (சாலை போன்றவை) பிரிந்து செல்வது

   ‘இந்தச் சாலையில் மூன்றாவது கிலோமீட்டரில் வரும் பிரிவில் திரும்புங்கள்’