தமிழ் பிரீதி யின் அர்த்தம்

பிரீதி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (ஒன்று செய்யப்படுவதால் ஏற்படும்) திருப்தி; மனநிறைவு; மகிழ்ச்சி.

  ‘ஒரு காலத்தில் தெய்வங்களைப் பிரீதி செய்வதற்காக உயிர்ப்பலி கொடுத்தனர்’

 • 2

  அருகிவரும் வழக்கு விருப்பம்; அன்பு.

  ‘பிரிவினால் மனைவியிடம் இருந்த பிரீதி இன்னும் அதிகமாயிற்று’

தமிழ் பிரதி யின் அர்த்தம்

பிரதி

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (புத்தகம், பத்திரிகை முதலியவை குறித்து வரும்போது) குறிப்பிட்ட உள்ளடக்கத்தைக் கொண்டு ஒரே மாதிரியாக வெளியிடப்படும் பலவற்றுள் ஒன்று; படி.

  ‘அந்தப் பத்திரிகை ஆறு லட்சம் பிரதிகள் விற்கிறது’
  ‘பிரதிகள் கைவசம் இல்லை என்று பதில் வந்தது’
  ‘விழா மலரின் முதல் பிரதியை அமைச்சர் பெற்றுக்கொண்டார்’

 • 2

  மூலத்திலிருந்து எடுக்கப்பட்டு அதைப் போலவே உள்ளது; நகல்.

  ‘இந்தப் புகைப்படத்தில் உங்களுக்கு எத்தனை பிரதி வேண்டும்?’
  ‘சான்றிதழ்களின் பிரதி அனுப்பினால் போதும்’
  ‘நாவலின் தட்டச்சுப் பிரதி என்னிடம் இருக்கிறது’

 • 3

  பெருகிவரும் வழக்கு ஒரு நூல் அல்லது கவிதை, சிறு கதை, நாவல் போன்ற இலக்கியப் படைப்புகளைக் குறிப்பிடும் சொல்; பனுவல்.

 • 4

  பாடம்.

  ‘மூலப் பிரதியில் பிழைகள் இருந்தன’

தமிழ் பிரதி யின் அர்த்தம்

பிரதி

பெயர்ச்சொல்-ஆக

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு பதில்; மாற்று.

  ‘என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய அவருக்குப் பிரதியாக என்ன செய்யப்போகிறேன்?’
  ‘வேலைக்கு வராதவர்களுக்குப் பிரதியாக இன்று மட்டும் வேறு ஆட்களை நியமித்துக்கொள்ளலாம்’

தமிழ் பிரதி யின் அர்த்தம்

பிரதி

பெயரடை

 • 1

  (கிழமை, மாதம் முதலியவற்றுடன் வருகையில்) (குறிப்பிடப்படும்) ஒவ்வொரு.

  ‘கடைக்குப் பிரதி வெள்ளி விடுமுறை’
  ‘பிரதி மாதம் பத்தாம் தேதிக்குள் தவணையைக் கட்ட வேண்டும்’