தமிழ் பிற்காலம் யின் அர்த்தம்

பிற்காலம்

பெயர்ச்சொல்

 • 1

  எதிர்காலம்.

  ‘கொஞ்சம்கொஞ்சமாகப் பணத்தைச் சேமித்துவைத்தால் கூடப் பிற்காலத்தில் உதவுமே!’
  ‘பிற்காலச் சந்ததியினருக்கு உதவும் நோக்கத்தில் இந்த ஆய்வில் அவர் ஈடுபட்டுள்ளார்’

 • 2

  கடந்த காலத்தில் குறிப்பிட்ட ஒரு பிந்தைய பகுதி.

  ‘இது சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்ட பிற்கால உரை’
  ‘பிற்காலச் சோழர்கள்’
  ‘பிற்காலத்தில்தான் என் ஆசிரியர் குறிப்பிட்டதை உணர முடிந்தது’