பிறகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிறகு1பிறகு2

பிறகு1

வினையடை

 • 1

  தொடர்ந்து அடுத்ததாக; பின்பு.

  ‘அவர் வீட்டுக்குப் போனாய், பிறகு என்ன செய்தாய்?’

 • 2

  பின்னொரு சமயத்தில்; அப்புறம்.

  ‘அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்’
  ‘அந்த வேலையைப் பிறகு செய்யலாம் என்று வைத்திருக்கிறேன்’

பிறகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிறகு1பிறகு2

பிறகு2

இடைச்சொல்

 • 1

  ‘குறிப்பிட்ட செயல் நிகழ்ந்ததும் அல்லது குறிப்பிட்ட நேரம் கழிந்ததும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘சாப்பிட்டு முடித்த பிறகு உலாவச் சென்றார்’
  ‘பணம் கொடுத்த பிறகும் ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்?’

 • 2

  முதல் கூற்று தெரிவிக்கும் செய்திக்குப் பொருத்தமான உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் அதற்கு மாறான உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமா என்று கேட்கும்போது பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘அப்புறம்’.

  ‘பணத்தைத் தொலைத்துவிட்டு வந்திருக்கிற உன்னைத் திட்டாமல் பிறகு கொஞ்சவா செய்வார்கள்?’