தமிழ் பிறப்பி யின் அர்த்தம்

பிறப்பி

வினைச்சொல்பிறப்பிக்க, பிறப்பித்து

  • 1

    (சட்டப்படியான ஆணையை) நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தல்; (புதிய சட்டத்தை) நடைமுறைக்குக் கொண்டுவருதல்.

    ‘கலவரப் பகுதியில் கண்டவுடன் சுடக் காவலருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’
    ‘போதைமருந்து கடத்தலைத் தடுப்பதற்காக அவசரச்சட்டம் ஒன்றை அரசு பிறப்பித்தது’