தமிழ் பிறப்பு யின் அர்த்தம்

பிறப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர்) பிறத்தல்.

  ‘பிறப்பு இறப்புப் பதிவாளர்’
  ‘பரமசிவம், பிறப்பு: 12-03-1942, இறப்பு: 15-06-06’

 • 2

  உயர் வழக்கு (ஒருவர் பிறந்த) குடும்பம் அல்லது குலம்.

  ‘உயர் பிறப்பு, தாழ் பிறப்பு என்று பேசாதே!’

 • 3

  பிறவி.

  ‘மறுபிறப்பு, ஏழு பிறப்பு இவற்றிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை’

 • 4

  (வருடம், மாதம் ஆகியவற்றின்) ஆரம்பம்; தொடக்கம்.

  ‘வருடப் பிறப்பு’