தமிழ் பிறர் யின் அர்த்தம்

பிறர்

பெயர்ச்சொல்

 • 1

  (தன்னை அல்லது தன் குழு, அமைப்பு போன்றவற்றைத் தவிர்த்த) மற்ற நபர்கள்.

  ‘இதுகூடப் பிறர் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமா?’
  ‘பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் இதைச் செய்யவில்லை’
  ‘பிறர் தயவில் எத்தனை நாள் வாழ முடியும்?’
  ‘அவர் தனக்குத் தெரிந்ததைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளத் தயங்க மாட்டார்’
  ‘நம் சங்கத்தின் விவகாரங்களில் பிறரை நுழைய விட வேண்டுமா?’