தமிழ் பிறழ் யின் அர்த்தம்

பிறழ்

வினைச்சொல்பிறழ, பிறழ்ந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஒன்று தான் இருக்கும் நிலையிலிருந்து அல்லது இடத்திலிருந்து விலகுதல்; பிசகுதல்.

  ‘மூட்டு பிறழ்ந்து தோள்பட்டை இறங்கிவிட்டது’

 • 2

  உயர் வழக்கு (ஒழுங்கு முறை) மாறுதல்.

  ‘செய்யுளை வரி பிறழாமல் சொன்னான்’
  ‘நீதி வழங்குவதில் முறை பிறழ்ந்த அரசன் கதை இது’
  ‘வாக்குப் பிறழக் கூடாது’