தமிழ் பிறழ் சாட்சி யின் அர்த்தம்

பிறழ் சாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு வழக்கில்) முதல் விசாரணையின்போது சாட்சி சொன்னவர், பிறகு தான் சொன்னதற்கு நேர்மாறாக நீதிமன்றத்தில் அளிக்கும் சாட்சி/அப்படி சாட்சி சொல்பவர்.

    ‘அரசுத் தரப்பு சாட்சியான ஓட்டுநர் பிறழ் சாட்சியாக அறிவிக்கப்பட்டார்’
    ‘பொருள்களை விநியோகிக்கும் உரிமை பெறத் தான் லஞ்சம் அளித்ததாக நீதிமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால், அவரே தனி நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்’