தமிழ் பிறவி யின் அர்த்தம்

பிறவி

பெயர்ச்சொல்

 • 1

  (பிறப்பிலிருந்தே குறிப்பிட்ட தன்மைகளை வெளிப்படுத்தும்) நபர்.

  ‘மனிதப் பிறவியில் இப்படி ஒரு விசித்திரப் பிறவியா?’
  ‘அந்தக் குழந்தை ஒரு தெய்வப் பிறவி’

 • 2

  (ஒருவரிடம் உள்ள குணத்தை அல்லது குறையைக் குறித்து வரும்போது) பிறந்ததிலிருந்தே இருப்பது.

  ‘அந்த விஞ்ஞானி ஒரு பிறவி மேதை’
  ‘பிறவிக் கலைஞன்’
  ‘பிறவியிலேயே ஊமை’

 • 3

  (இந்து மதத்தில்) இறந்த பிறகு பிறந்து வாழ வேண்டிய (ஏழு என்று கருதப்படுகிற) வாழ்க்கைகளுள் ஒன்று; ஜென்மம்; பிறப்பு.

  ‘‘நான் போன பிறவியில் போஜராஜனின் மனைவியாக இருந்தேன்’ என்றது அந்தக் கிளி’