தமிழ் பிள்ளையார் சுழி யின் அர்த்தம்

பிள்ளையார் சுழி

பெயர்ச்சொல்

 • 1

  எழுதத் தொடங்கும்போது தாளின் மேல்பக்கத்தில் (விநாயகரை வேண்டிக்கொள்ளும் முறையில்) முதன்முதலாக எழுதும் ‘உ’ என்ற மங்கலக் குறியீடு.

  ‘பிள்ளையார் சுழி போட்டுப் புது வருடக் கணக்கை எழுத ஆரம்பித்தார்’
  ‘பிள்ளையார் சுழியுடன் கடிதம் ஆரம்பித்திருந்தது’

 • 2

  தொடக்கம்; ஆரம்பம்.

  ‘இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி அவர் கொடுத்த பேட்டிதான்’
  ‘இந்தப் படத்தை இயக்கியதன்மூலம் இயக்குநர் தனது திரையுலக வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்’
  ‘இந்தச் சந்திப்பின் மூலம் ஒரு வலுவான நட்புக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளோம்’