தமிழ் பிழைப்பு யின் அர்த்தம்

பிழைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (அன்றாட நிலைமைகளின் மூலம் ஒருவருக்கு அமையும்) வாழ்க்கை.

  ‘‘என்ன பிழைப்பு இது,’ என்று அலுத்துக்கொண்டார்’
  ‘உன் பிழைப்பு எவ்வளவோ தேவலாம்’
  ‘சின்ன வேலையானாலும் அவருக்குக் கௌரவமான பிழைப்பு இருக்கிறது’

 • 2

  (வாழ்க்கையின்) அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான பணம், பொருள் ஆகியவற்றைச் சம்பாதிக்கும் வழிமுறை.

  ‘பிழைப்புத் தேடி நகரங்களுக்கு வருகிறார்கள்’
  ‘பிழைப்புக்காக நிலத்தையே நம்பியிருக்கும் விவசாயிகள்’
  ‘கூலி வேலை கிடைக்காத நாட்களில் வட்டிக்குப் பணம் வாங்கிப் பிழைப்பு நடத்துகிறோம்’