தமிழ் பீரோ யின் அர்த்தம்

பீரோ

பெயர்ச்சொல்

  • 1

    (பொருள்களைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்வதற்குப் பயன்படுமாறு) மரத்தினால் அல்லது இரும்பினால் உயரமாகவும் உள்ளே அடுக்குகள் இருக்குமாறும் கதவுகள் உடையதாகவும் செய்யப்படும் சாதனம்; அலமாரி.

    ‘அவர் பத்திரங்களை பீரோவினுள் வைத்திருக்கிறார்’
    ‘பீரோவை உடைத்து அதிலுள்ள பணம், நகைகளைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்’