தமிழ் புகலிடம் யின் அர்த்தம்

புகலிடம்

பெயர்ச்சொல்

 • 1

  அடைக்கலம்; தஞ்சம்.

  ‘குற்றவாளிகளுக்குப் புகலிடம் அளிப்பது குற்றம் ஆகும்’
  ‘புகலிடம் தேடி ஆயிரக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போயிருக்கிறார்கள்’

 • 2

  (வேட்டையாடுதல் தடைசெய்யப்பட்டு) பறவைகள், விலங்குகள் ஆகியன பாதுகாப்பாக வசிப்பதற்கான இடம்; சரணாலயம்.

  ‘வேடந்தாங்கல் பறவைகள் புகலிடத்திற்கு இந்த வருடம் ஏராளமான செங்கால் நாரைகள் வந்திருக்கின்றன’