தமிழ் புகுத்து யின் அர்த்தம்

புகுத்து

வினைச்சொல்புகுத்த, புகுத்தி

 • 1

  அருகிவரும் வழக்கு (ஒன்றை ஒன்றினுள்) செலுத்துதல்; உட்செலுத்துதல்; நுழைத்தல்.

  ‘பாக்டீரியாவின் உட்கருவுக்குள் இந்த வேதிப்பொருள் புகுத்தப்பட்டு சோதிக்கப்படுகிறது’

 • 2

  (நடைமுறை, வரலாறு, கலை, இலக்கியம் போன்றவற்றில் புதியதாக ஒன்றை வலுக்கட்டாயமாகவோ மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலோ) சேர்த்தல்; திணித்தல்.

  ‘வரலாற்று நூல்களில் ஆதாரம் இல்லாத தகவல்களைப் புகுத்தும் போக்கு தவறானது’
  ‘இந்தியாவில் ஆங்கிலக் கல்வி ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காகப் புகுத்தப்பட்டது’
  ‘பிறமொழிச் சொற்கள் தமிழில் புகுத்தப்படுவதை அவர் வன்மையாக எதிர்த்து வந்தார்’
  ‘படத்தில் செயற்கையான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுப் பாடல்கள் புகுத்தப்பட்டுள்ளன’