தமிழ் புகுந்துவிளையாடு யின் அர்த்தம்

புகுந்துவிளையாடு

வினைச்சொல்-விளையாட, -விளையாடி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஒன்றை) மிகச் சிறப்பாகச் செய்தல்.

  ‘தேர்வுத் தாள் சுலபமாக இருந்ததால் மாணவர்கள் புகுந்துவிளையாடிவிட்டார்கள்’
  ‘மலையாளம் பேசத் தெரியுமா என்று கேட்டேன். அவர் புகுந்துவிளையாடிவிட்டார்’

 • 2

  பேச்சு வழக்கு (பிடித்த உணவு என்பதால்) மிகுந்த விருப்பத்துடன் ரசித்து நிறையச் சாப்பிடுதல்.

  ‘கல்யாணச் சாப்பாடு நன்றாக இருந்ததால் என் நண்பர் புகுந்துவிளையாடிவிட்டார்’