தமிழ் புகைச்சல் யின் அர்த்தம்

புகைச்சல்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரே இடத்தில்) சுழன்று வரும் புகை.

  ‘சமையல் அறையில் நிற்க முடியவில்லை; ஒரே புகைச்சல்’

 • 2

  வட்டார வழக்கு (தொண்டையில் ஏற்படும்) கரகரப்புடன் கூடிய எரிச்சல்.

  ‘எனக்கு நான்கு நாட்களாகத் தொண்டைப் புகைச்சல்’

 • 3

  (மனிதர்களுக்கு இடையில் நீண்ட நாட்களாக வெளியே புலப்படாதவாறு இருக்கும்) மனக் குமுறல்; எரிச்சல்.

  ‘வெகு நாட்களாகவே அவர்களுக்குள் இந்தப் புகைச்சல் இருந்துவந்திருக்கிறது’
  ‘நிலத்தை விற்கும் விவகாரத்தில் பங்காளிகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டு இப்போது பெரிய சண்டையாக உருவெடுத்துவிட்டது’
  ‘அவர்மேல் உள்ள புகைச்சலை அவன் தனது கட்டுரையில் கொட்டியிருந்தான்’