தமிழ் புட்டி யின் அர்த்தம்

புட்டி

பெயர்ச்சொல்

  • 1

    கண்ணாடியால் செய்யப்பட்டு திரவங்களை உள்ளே ஊற்றி மூடி வைத்துக்கொள்ளும் வகையில் இருப்பதும் மேற்புறம் குறுகிய வாயை உடையதுமான (பெரும்பாலும்) உருளை வடிவக் கொள்கலன்; குப்பி; பாட்டில்.

    ‘அவள் குழந்தைக்குப் புட்டியில் பால் கொடுத்தாள்’
    ‘அலமாரியில் மது நிரம்பிய புட்டிகளும் காலிப் புட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன’

தமிழ் புட்டி யின் அர்த்தம்

புட்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மூங்கில், பிரம்பு போன்றவற்றால் பின்னப்பட்ட சிறிய கூடை.