தமிழ் புடம்போடு யின் அர்த்தம்

புடம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

 • 1

  (தங்கம் போன்ற உலோகங்களை நெருப்பில்) உருக்கிச் சுத்தப்படுத்துதல்.

  ‘பழைய பொன்னைப் புடம்போட்ட பின்னர் நகைகள் செய்வார்கள்’

 • 2

  (மூலிகை போன்றவற்றை நெருப்பில் இட்டு) எரித்து பஸ்பமாக்குதல்.

 • 3

  (ஒன்றை) மேன்மைப்படுத்தும் பொருட்டுப் பல சோதனைகளுக்கு உட்படுத்துதல்.

  ‘எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே பலமுறை புடம் போட்ட பின்புதான் சந்தைக்கு வருகின்றன. அதனால் கலப்படம் என்ற பேச்சுக்கே இடமில்லை’
  ‘இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவருமே தேர்வுக் குழுவினரால் புடம்போடப்பட்டவர்கள்’