தமிழ் புத்திசுவாதீனம் யின் அர்த்தம்

புத்திசுவாதீனம்

பெயர்ச்சொல்

 • 1

  சிந்திக்கும் திறனின் விளைவாகத் தன் செயல், உணர்வு முதலியவற்றின் மீது ஒருவர் கொண்டிருக்கும் சுயக் கட்டுப்பாடு.

  ‘புத்திசுவாதீனம் இல்லாதபோது அவரிடம் கையெழுத்தை வாங்கிவிட்டார்கள்’
  ‘புத்திசுவாதீனம் இல்லாத ஆள்’
  ‘என் புத்திசுவாதீனத்தைச் சந்தேகிக்கிறாயே’
  ‘ஒருவர் புத்திசுவாதீனத்தோடு இருக்கும்போது எழுதித் தரும் பத்திரமே சட்டப்படி செல்லுபடியாகும்’