தமிழ் புதன் யின் அர்த்தம்

புதன்

பெயர்ச்சொல்

 • 1

  சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் சிறிய கிரகம்.

  ‘சூரியனிலிருந்து 5.79 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் புதன் இருக்கிறது’

 • 2

  (மேற்குறிப்பிட்ட கிரகத்தின் பெயரால் குறிக்கப்படும்) வாரத்தின் நான்காவது நாள்.

 • 3

  சோதிடம்
  தாய்மாமன், அறிவு, நட்பு, பயணம், நிதானம், பச்சை நிறம், மரகதக் கல், வடக்குத் திசை முதலியவற்றைக் குறிக்கும் கிரகம்.