தமிழ் புதிதில் யின் அர்த்தம்

புதிதில்

இடைச்சொல்

  • 1

    (பெரும்பாலும் இறந்தகாலப் பெயரெச்சத்திற்குப் பின்) ‘ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்த சிறிது காலத்திற்குள்’ என்னும் பொருள் தரும் இடைச்சொல்.

    ‘வாங்கிய புதிதில் புடவை பளபளப்பாக இருந்தது’
    ‘நாங்கள் இந்த ஊருக்கு வந்த புதிதில் இங்கெல்லாம் கடையே கிடையாது’