தமிழ் புதிது யின் அர்த்தம்
புதிது
பெயர்ச்சொல்-ஆக, -ஆன
- 1
அறிதல், பயன்படுத்துதல், பழக்கப்படுத்துதல் முதலிய செயல்களுக்கு ஒன்று அல்லது ஒருவர் முதல்முறையாகவோ அண்மைக் காலத்திலோ உட்பட்ட நிலை/அப்படி உட்பட்ட ஒன்று அல்லது ஒருவர்.
‘இந்த இடம் எனக்குப் புதிது’‘புதிதாக ஏதாவது புத்தகம் வாங்கினாயா?’‘நான் சென்னைக்குப் புதிது’‘நமது மொழிக்கு மிகவும் புதிதான ஒரு கதை வடிவம் இந்த நாவல்’‘புதிதாகத் திருமணம் செய்துகொண்டவர்கள்’‘இவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள்’‘புதிதாக எதாவது சாப்பிட வாங்கிக்கொண்டு வா’