தமிழ் புதிர் யின் அர்த்தம்

புதிர்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்ளவோ விளக்கவோ முடியாத ஒன்று; மர்மம்.

  ‘பறக்கும் தட்டுகள் பற்றிய செய்தி இன்னும் புதிராகத்தான் இருக்கிறது’
  ‘அவருடைய புதிரான நடவடிக்கைகள் காரணமாக யாரும் அவருடன் பழகுவதே கிடையாது’
  ‘பிரபஞ்சம் இன்னும் ஒரு புதிராகத்தான் இருக்கிறது’

 • 2

  ஒருவருடைய அறிவுத் திறனைச் சோதிக்கும் வகையிலும் ஒரு விடையைக் கொண்டிருக்கும் வகையிலும் கேளிக்கையாக அமைந்திருப்பது; விடுகதை.

  ‘அரசகுமாரி போட்ட புதிரை விடுவித்து இளவரசன் அவளை மணந்துகொண்டான்’
  ‘ஒரு கணக்குப் புதிருக்கு விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன்’

தமிழ் புதிர் யின் அர்த்தம்

புதிர்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அறுவடை முடிந்து, வீட்டுக்குக் கொண்டுவந்து உணவுக்கு முதன்முதலாகப் பயன்படுத்தும் நெல்; புது நெல்.