தமிழ் புதுக்கு யின் அர்த்தம்

புதுக்கு

வினைச்சொல்புதுக்க, புதுக்கி

 • 1

  உயர் வழக்கு (பழுதடைந்த நிலையில் உள்ளதை அல்லது பழைய பாணியில் இருப்பதை) புதுப் பொலிவுடன் மாற்றி அமைத்தல்.

  ‘பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவர் சங்கர நமச்சிவாயர் உரையில் சில திருத்தங்களைச் செய்து புதுக்கினார்’
  ‘இந்தக் கோயிலைப் புதுக்கியவர் செம்பியன் மாதேவியார் என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது’
  ‘வின்சுலோ அகராதியைப் புதுக்கி வெளியிடுவதற்காக அப்போது திட்டமிட்டனர்’

 • 2

  வட்டார வழக்கு (பாத்திரம் முதலியவை) பளபளப்படையும்படி செய்தல்; மெருகேற்றுதல்.

  ‘விளக்கைப் புளி போட்டுப் புதுக்கு’