தமிழ் புதுப்பி யின் அர்த்தம்

புதுப்பி

வினைச்சொல்புதுப்பிக்க, புதுப்பித்து

 • 1

  (பழுதடைந்தது, பழைய பாணியில் இருப்பது, பலவீனமானது போன்றவற்றை) புதுப் பொலிவுடன் மாற்றி அமைத்தல்; புத்துயிர் அளித்தல்.

  ‘கிராமத்தில் உள்ள வீட்டைப் புதுப்பித்து அதில் குடியேறினார்’
  ‘நமது உடலிலுள்ள செல்கள் இடைவிடாது தம்மைப் புதுப்பித்துக்கொள்கின்றன’
  ‘தம்மைப் புதுப்பித்து வளர்த்துக்கொள்ளும் ஆற்றல் எலும்புகளுக்கு உண்டு’
  உரு வழக்கு ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு கடிதத்தின் மூலம் எங்களது தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டோம்’

 • 2

  (குறிப்பிட்ட கால எல்லையுடன் முடியும் வங்கிக் கணக்கு, உரிமம், சந்தா போன்றவற்றை அல்லது ஏற்கனவே செய்த ஒன்றை) மீண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டித்தல்.

  ‘உன் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்துவிட்டாயா?’
  ‘இரண்டு நிறுவனங்களும் தங்கள் ஒப்பந்தத்தை மறுபடியும் புதுப்பித்துக்கொண்டன’