தமிழ் புதுமை யின் அர்த்தம்

புதுமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்று) இதுவரையில் இல்லாததாகவும் வழக்கமானதிலிருந்து மாறுபட்டதாகவும், புதியதாகவும் இருக்கும் தன்மை அல்லது நிலை.

  ‘புதுமைக்காகவும் நகைச்சுவைக்காகவும் வட்டார வழக்கைத் திரைப்படங்களில் பயன்படுத்துகிறார்கள்’
  ‘பழைய கதைதான் என்றாலும் புதுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது’

 • 2

  (பழங்காலத்தைச் சார்ந்ததாக இருந்தாலும்) தற்காலத் தன்மை கொண்டதாக இருப்பது.

  ‘முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதைதான் என்றாலும் உரைநடை புதுமையானதாகவே இருக்கிறது’

 • 3

  உயர் வழக்கு புதுக் கருக்கு.

  ‘புதுமை மாறாத தோற்றம்’

 • 4

  அதிசயம்.

  ‘தண்ணீரைக்கூடக் காசு கொடுத்து வாங்க வேண்டுமா? பட்டணத்தில் எல்லாம் புதுமையாகத்தான் இருக்கிறது!’