வினைச்சொல்
- 1
(கடினத் தன்மை இல்லாத மணல், சேறு போன்றவற்றின் பரப்புக்குள் ஒன்று) அழுந்தி அல்லது அழுத்தப்பட்டு உட்செல்லுதல்.
‘கை தவறி விழுந்த காசு கடற்கரை மணலில் புதைந்துவிட்டது’‘சேற்றில் புதைந்துவிட்ட வண்டியை மாடுகளால் இழுக்க முடியவில்லை’உரு வழக்கு ‘மனத்தில் புதைந்து கிடக்கும் ஆசைகள்’ - 2
(செய்திகள், கருத்துகள் போன்றவை ஒன்றில்) எளிதில் புலப்படாதபடி உள்ளடங்கியிருத்தல்; பொதிந்திருத்தல்.
‘மக்கள் செய்யும் ஒவ்வொரு சடங்கிலும் பல செய்திகள் புதைந்துள்ளன’‘இந்தச் சொல்லில் இத்தனை பொருள் புதைந்துள்ளதா?’
வினைச்சொல்
- 1
(குழி முதலியவற்றில் ஒன்றை வைத்து) மண்ணைக் கொட்டி மூடி மறைத்தல்.
‘பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்துவைத்தவர்களும் உண்டு’‘சாலையில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன’‘தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் பானைகள் கைப்பற்றப்பட்டன’ - 2
(பிணத்தை) அடக்கம் செய்தல்.
‘குழந்தைகள் இறந்தால் புதைப்பதுதான் வழக்கம்’‘இறந்தவர்களை உங்கள் மதத்தில் புதைப்பீர்களா, எரிப்பீர்களா?’ - 3
(முகம், தலை முதலியவற்றை ஒரு பரப்பில்) அழுந்தப் பதித்தல்.
‘தலையணையில் முகம் புதைத்து அழுதாள்’ - 4
உயர் வழக்கு (கண், வாய் போன்றவற்றை) பொத்துதல்; மூடுதல்.
‘நாணத்தால் கண் புதைத்தாள்’‘சேவகர்கள் அரசர்முன் கைகட்டி வாய் புதைத்து நின்றனர்’