தமிழ் புதைபடிவம் யின் அர்த்தம்

புதைபடிவம்

பெயர்ச்சொல்

  • 1

    பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்கள் அல்லது தாவரங்கள் புதைந்து இறுகிப் பாறையாக மாறும் படிவு; தொல்லுயிர் எச்சம்.

    ‘பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்துக்குள் சென்று புதைபடிவமாகிவிட்ட மரங்களே கல் மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன’
    ‘ஆதி மனிதனின் புதைபடிவ எச்சம் ஒன்று 1700ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது’