தமிழ் புத்தகம் யின் அர்த்தம்

புத்தகம்

பெயர்ச்சொல்

 • 1

  படிப்பதற்கு ஏற்ற வகையில் அட்டைகளுக்கு இடையே இணைக்கப்பட்ட அச்சிட்ட தாள்களின் தொகுப்பு; நூல்.

  ‘பொழுதுபோகவில்லை, புத்தகம் ஏதாவது இருந்தால் படிக்கக் கொடு’
  ‘கதைப் புத்தகம்’
  ‘இன்று பல புத்தகங்களை இணையதளத்தில் படிக்க முடியும்’

 • 2

  எழுதுவதற்கு ஏற்ற வகையில் வெற்றுத் தாள்களை அட்டைகளுக்கு இடையே இணைத்த தொகுப்பு.

  ‘அவன் கையில் ஒரு பாடப் புத்தகமும் இரண்டு நோட்டுப் புத்தகங்களும் வைத்திருந்தான்’