தமிழ் புத்தி யின் அர்த்தம்

புத்தி

பெயர்ச்சொல்

 • 1

  (படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும்) அறிவு.

  ‘புத்திக் கூர்மை மிக்கவர் அவர்’
  ‘புத்தி சாதுரியத்தில் அவளை மிஞ்ச ஆளில்லை’
  ‘தெளிந்த புத்தியைக் கல்வி கொடுக்க வேண்டும்’
  ‘இது என் புத்திக்கு உறைக்காமல் போய்விட்டது’
  ‘நான் சொல்வதெல்லாம் உன் புத்திக்கு எட்டாது’
  ‘‘கடவுள் என்பது புத்திக்கு அப்பாற்பட்ட விஷயம்’ என்றார் சாமியார்’

 • 2

  நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்படுகிற திறன்.

  ‘அவனுக்குச் சுய புத்தியும் இல்லை, பிறர் சொன்னால் கேட்பதும் இல்லை’
  ‘‘கடவுளே, இவனுக்கு நல்ல புத்தியைக் கொடு’ என்று தாய் வேண்டிக்கொண்டாள்’
  ‘மந்த புத்தியுடையவன் அவன்’

 • 3

  எண்ணம்; மனப்போக்கு.

  ‘அவன் புத்தி போகிற போக்கைப் பார்!’
  ‘மனிதனுடைய புத்தி அடிக்கடி மாறுகிறது’

 • 4

  (குறிப்பிட்ட வகையிலான ஒருவரின்) குணம்.

  ‘என் அவசரப் புத்தியினால் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன்’
  ‘அடிமைப் புத்தி’
  ‘அவனுக்குக் குரங்குப் புத்தி’

 • 5

  அறிவுரை; புத்திமதி.

  ‘அவனுக்கு நன்றாகப் புத்தி சொல்லி அனுப்புங்கள்’

 • 6

  மனநிலை.

  ‘பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொஞ்ச நாட்களாகப் புத்தி சரியில்லை’

 • 7

  சோதிடம்
  (ஒரு கிரகத்துக்கு உரிய) தசையின் உட்பிரிவு.

  ‘தற்போது இவருக்குச் சனி தசையில் செவ்வாய் புத்தி நடக்கிறது’
  ‘குரு தசை சுக்கிர புத்தியில்தான் இவருக்குத் திருமணம் நடைபெறும்’