புனை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புனை1புனை2

புனை1

வினைச்சொல்புனைய, புனைந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஆடை, ஆபரணம் முதலியவற்றை) அணிதல்.

  ‘ஆற்றில் நீராடிப் புத்தாடை புனைந்தனர்’

 • 2

  உயர் வழக்கு (வேடம் அல்லது மாலை, மகுடம், ஆடை அணிகலன்கள் போன்றவற்றை) அணிதல்; தரித்தல்.

  ‘கூத்தில் ராவணன் வேடம் புனைந்து ஆடியவர் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டார்’
  ‘திருமலை நாயக்கரின் புதல்வர் மணி முடி புனைந்து அரியணையில் அமர்ந்தார்’
  ‘விதேசித் துணிகளைத் துறந்து கதராடைகளைப் புனைந்து அந்தக் காலத்தில் பல தியாகிகள் போராட்டம் நடத்தினர்’

புனை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புனை1புனை2

புனை2

வினைச்சொல்புனைய, புனைந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (கதை, கவிதை முதலியவை) இயற்றுதல்; படைத்தல்.

  ‘அவர் கவி புனைவதில் வல்லவர்’
  ‘புதியன புனையும் ஆற்றலை மாணவர்கள் இடையே வளர்க்க வேண்டும்’

 • 2

  உயர் வழக்கு (பொய்யாக ஒன்றை) உருவாக்குதல்.

  ‘நமது கட்சித் தொண்டர்கள்மீது பொய் வழக்கு புனைந்துள்ளனர்’
  ‘பொய் ஆவணம் புனைவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்’