தமிழ் புரட்சி யின் அர்த்தம்

புரட்சி

பெயர்ச்சொல்

 • 1

  ஆட்சிக்கு எதிரான குழுக்கள் வன்முறையின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் செயல்.

  ‘சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடு முழுவதும் பல்வேறு புரட்சி இயக்கங்கள் செயல்பட்டுவந்தன’
  ‘மக்கள் செய்த புரட்சியின் காரணமாக அந்த நாட்டில் ஆட்சி கவிழ்ந்தது’

 • 2

  (ஒரு துறையில்) மரபாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலவிவரும் கருத்துகளை மாற்றியமைக்கும் விதத்திலான சிந்தனை, செயல்பாடு ஆகியவை.

  ‘ஐம்பதுகளில் பாட்டே இல்லாமல் தமிழில் ஒரு படம் வந்தபோது அது பெரும் புரட்சியாகக் கருதப்பட்டது’
  ‘பத்திரிகை உலகில் பல புரட்சிகளைச் செய்தவர் வாசன்’
  ‘எஸ்ரா பவுண்டின் விமர்சனங்கள், கருத்துகள் புதுக்கவிதையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின’
  ‘தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக நமது வாழ்க்கை முறையே முற்றிலும் மாறிவிட்டது’