தமிழ் புராணம் யின் அர்த்தம்

புராணம்

பெயர்ச்சொல்

 • 1

  கடவுளரை முக்கியப் பாத்திரங்களாகக் கொண்டு ஒழுக்கத்தையும் நீதியையும் நிலைநாட்டும் விதத்தில், பழங்காலத்தில் நடந்ததாகச் செய்யுள் அல்லது உரைநடை வடிவில் விரிவாகக் கூறப்பட்ட கதை.

  ‘ஆரம்ப காலத்தில் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன’

 • 2

  ஒருவர் தன் குறைகள், கஷ்டங்கள், பெருமைகள் போன்றவற்றைப் பற்றி பிறரிடம் (எரிச்சலைத் தூண்டும் விதத்தில்) திரும்பத்திரும்பச் சொல்லும் செயல்.

  ‘பணம் இல்லை என்கிற புராணத்தை நிறுத்து’
  ‘அவர் அமெரிக்கா போய்விட்டு வந்ததிலிருந்து ஒரே அமெரிக்கா புராணம்தான்’
  ‘உன்னுடைய பிறந்த வீட்டுப் புராணத்தை முதலில் நிறுத்து’