புரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புரி1புரி2புரி3புரி4

புரி1

வினைச்சொல்புரிய, புரிந்து

 • 1

  சொற்கள், சைகைகள் போன்றவற்றின் பொருளை உணர்ந்துகொள்ளுதல்.

  ‘உன் கவிதை எனக்குப் புரியவில்லை’
  ‘நீ ஆங்கிலத்தில் பேசினாலும் அவருக்குப் புரியும்’
  ‘நான் சொல்வது உனக்குப் புரிகிறதா?’
  ‘மூச்சிரைக்க அவன் ஓடி வந்ததைப் பார்த்து ஏதோ அவசரம் என்று புரிந்துகொண்டேன்’

 • 2

  ஒன்று இவ்வாறு இருக்கிறது என்றோ அல்லது ஒன்றை இவ்வாறு செய்ய வேண்டும் என்றோ உணர்தல்.

  ‘என் நிலைமை புரியாமல் பேசாதே!’
  ‘நடு வழியில் வாகனம் நின்றுவிட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்’
  ‘அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குப் புரிவதற்கு வெகு நேரமாயிற்று’

 • 3

  (ஒருவரின் குணம், போக்கு போன்றவற்றை) அறிதல்.

  ‘கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும்’

புரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புரி1புரி2புரி3புரி4

புரி2

வினைச்சொல்புரிய, புரிந்து

 • 1

  (ஒரு செயலை) செய்தல்.

  ‘அவர் இளம் வயதிலேயே பல சாதனைகள் புரிந்துள்ளார்’
  ‘சாகசங்கள் புரிந்து பெற்ற வெற்றி’

புரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புரி1புரி2புரி3புரி4

புரி3

துணை வினைபுரிய, புரிந்து

 • 1

  ‘செய்தல்’ என்னும் பொருள் தரும் வினையாக்கும் வினை.

  ‘அவர் மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிகிறார்’
  ‘குற்றம்புரிந்தவன் நிம்மதி இழக்கிறான்’
  ‘ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்த தமிழ்நாட்டு மன்னர்கள்’

புரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புரி1புரி2புரி3புரி4

புரி4

பெயர்ச்சொல்