தமிழ் புரிபடு யின் அர்த்தம்

புரிபடு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில்) (ஒரு செயல், நிலைமை அல்லது சொல், தொடர் போன்றவற்றின் பொருள்) விளங்குதல்; புரிதல்.

  ‘கண்விழித்துப் பார்த்தவுடன் அவளுக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்பதே சற்று நேரம் புரிபடவில்லை’
  ‘இந்தக் கவிதையில் எந்த வரியுமே எனக்குப் புரிபடவில்லை’
  ‘அவனது போக்கே நமக்குப் புரிபடாது’
  ‘அவன் நடத்தை இப்போதுதான் கொஞ்சம்கொஞ்சமாகப் புரிபட ஆரம்பித்தது’