தமிழ் புருசு யின் அர்த்தம்

புருசு

பெயர்ச்சொல்

  • 1

    (சுத்தப்படுத்துவதற்கு அல்லது வண்ணம் போன்றவற்றைத் தீட்டுவதற்கு ஏதுவாக) ஒரு முனையில் நார் போன்றவற்றைக் கொண்டு செய்த அமைப்பையும் மறு முனையில் கைப்பிடியையும் கொண்ட சாதனம்.

    ‘தேங்காய் நாரிலிருந்து பலவகை புருசுகளைத் தயாரிக்கிறார்கள்’
    ‘பட்டையான புருசு ஒன்றும் மெலிதான புருசு ஒன்றும் வாங்கிக் கொண்டு வா’