புரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புரை1புரை2

புரை1

பெயர்ச்சொல்

 • 1

  திடப்பொருள்களில் இருக்கும் நுண்ணிய துளைகள்.

  ‘கடல்பஞ்சினுடைய உடலின் பக்கச் சுவர்களில் புரைகள் எனப்படும் துளைகள் ஏராளமாக இருக்கின்றன’

 • 2

  வட்டார வழக்கு தொழுவம்.

  ‘மாடுகளுக்குத் தண்ணீர் காட்டிவிட்டுக் கன்றுகளை வேறு புரையில் அடைத்தான்’

 • 3

  வட்டார வழக்கு அறை.

  ‘தெற்குப் புரையில் சத்தம் போட்டுப் படித்துக்கொண்டிருந்தான்’
  ‘சமையல் புரையில் வேலைகளை முடித்த பிறகு பாத்திரங்களைக் கழுவி வைத்தாள்’

புரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புரை1புரை2

புரை2

பெயர்ச்சொல்

 • 1

  கண்புரை.

  ‘சுமார் ஆயிரம் பேருக்குக் கண் பரிசோதனை செய்யப்பட்டுப் புரை நீக்கம் செய்யப்பட்டது’