தமிழ் புரையோடு யின் அர்த்தம்

புரையோடு

வினைச்சொல்புரையோட, புரையோடி

  • 1

    இரத்த ஓட்டம் தடைபட்டுப் புண்ணும் புண்ணை ஒட்டியுள்ள சதைப் பகுதியும் உள்ளுக்குள்ளாகச் சீழ்பிடித்து அழுகுதல்.

    ‘புரையோடிய புண் ஆறுவதற்கு நாளாகும்’
    உரு வழக்கு ‘புரையோடிவிட்ட ஊழலை ஒழிக்க முடியுமா?’