தமிழ் புறக்கணி யின் அர்த்தம்

புறக்கணி

வினைச்சொல்புறக்கணிக்க, புறக்கணித்து

 • 1

  ஒன்றைக் கவனத்தில், கருத்தில் கொள்வதைத் தவிர்த்தல்; அலட்சியப்படுத்துதல்; ஒதுக்குதல்.

  ‘உண்மை நிலையை அடியோடு புறக்கணித்துவிட்டுப் பேசாதீர்கள்’
  ‘தொழிற்சங்கங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலை மாறிவிட்டது’
  ‘மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் புறக்கணிக்கக் கூடாது’
  ‘யாப்பிலக்கணத்தைப் புறக்கணித்துவிட்டுப் பிறந்ததுதான் புதுக்கவிதை’
  ‘பெற்றோரைப் புறக்கணித்துவிட்டுத் திருமணம் செய்து கொண்டான்’

 • 2

  ஒன்றில் கலந்துகொள்ள, பங்கேற்க அல்லது ஒன்றை ஒப்புக்கொள்ள மறுத்தல்; நிராகரித்தல்.

  ‘செயற்குழுக் கூட்டத்தைப் புறக்கணிக்க சில உறுப்பினர்கள் முடிவுசெய்தனர்’
  ‘நீண்ட காலமாகத் தங்கள் ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக ஊரார் அறிவித்தனர்’
  ‘இந்தத் திட்டத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது என்பதால் நாங்கள் அதைப் புறக்கணிக்கிறோம்’